வாடகை வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் சொந்தமாக ஒரு சின்ன இடமாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த இடத்தில் எப்படியாவது, கடனை வாங்கியாவது வீடு கட்டி விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். நியாயமான ஆசைதான். என்ன செய்வது நிறைவேற சற்று காலதாமதம் ஆகத்தான் செய்யும். விற்கும் விலைவாசிகள் அப்படி. நினைத்த உடன் நிலத்தையும், வீட்டையும் வாங்கிவிட முடியுமா? சற்று கடினமான விஷயம்தான். எப்படியாவது வீட்டை கட்டி விட வேண்டும் என்ற விடாமுயற்சியும், எண்ணமும், நம் கனவை நிச்சயமாக நிறைவேற்றி விடும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுடைய முயற்சிகள், விரைவாக பலனளிக்க நம் முன்னோர்களால் கூறப்பட்ட இந்த சிறிய பரிகாரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். விரைவில் வீடு கட்டுவதற்கான நல்ல வழி உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
நிலம் வாங்கி வீடு கட்டும் எண்ணம் நிறைவேற நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட ஒரு சின்ன பரிகாரம்