வாராஹி தேவியின் அருளை உடனடியாக பெறக்கூடிய அந்த 4 நபர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா

வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால், இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள். ஆனால் நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் எப்பேர்பட்ட பெரிய கஷ்டங்கள் கூட, சுலபமாக விரைவாக தீர்ந்துவிடும் என்பது உண்மை. ஆனால் நம்மில் பலர் வாராஹி அம்மனை வழிபடுவது ஆபத்து என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நிச்சயமாக இல்லை. வாராஹி அம்மன் வேண்டிய வரத்தை, நம் கையில் கொடுக்கும் சக்தி வாய்ந்தவள் என்பதை மறந்துவிடாதீர்கள். நமக்கு காவல் தெய்வமாக நின்று, நம்மை கெட்ட சக்திகளிலிருந்து பாதுகாத்து அருள் பாவிப்பால் என்பதும் உண்மை. வராஹி அம்மனை எப்படி வழிபட்டால் தீராத கஷ்டங்கள் கூட, விரைவாக, சுலபமாக தீர்ந்துவிடும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.