சிவராத்திரி அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் என்ன பலன்

சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலையால் அர்ச்சனை செய்ய மறந்து விடாதீர்கள். உங்களது வீட்டில் சிவலிங்கம் அல்லது திருவுருவப் படம் இல்லை என்றாலும் கோவிலுக்கு சென்று கட்டாயம் வில்வ இலையை உங்களின் கைகளால் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்வதன் மூலம் நல்ல பலனை அடையலாம். மகா சிவராத்திரி அன்று வில்வ இலையால் அர்ச்சனை செய்வதன் மூலம் ஏழு ஜென்மத்தின் பாவங்களும் நம்மை விட்டு விலகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால், எப்படிப்பட்ட பலனை அடையலாம்? என்பதற்கு ஒரு சிறிய வரலாற்று கதையும் உண்டு. அந்தக் கதையை மகாசிவராத்திரியன்று இன்று நாம் தெரிந்து கொள்வோமா? சிவனைப் போற்றும் பாடல்களையும், சிவனின் மகிமைகளைக் கூறும் கதைகளையும், மஹாசிவராத்திரியான இன்று நாம் படிப்பது சாலச் சிறந்தது.


ஒருநாள் கைலாயத்தில் சிவபெருமானும், உமாதேவியும் வில்வ மரத்திற்கு அடியில் அமர்ந்து வேத ஆகமங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் வில்வ மரத்திற்கு மேலே அமர்ந்திருந்த ஒரு குரங்கு தன் கைகளை வைத்துக்கொண்டு அமைதியாக இல்லாமல், அந்த வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தது. கீழே இருந்த எம் பெருமானையும், சக்தி தேவியையும் அந்த குரங்கு விடியும் வரை கவனிக்கவே இல்லை.’குரங்கு சேட்டை என்று சொல்வார்கள் அல்லவா அதுதான் இது’.