திருவண்ணாமலையின் சிறப்பம்சமாக விளங்குவது இங்கு லிங்கோத்பவராக காட்சி தருகிறார். சிவபெருமானின் ரூபங்களில் அக்னியில் உதித்த ஈசன் முதலாவதாக தோன்றியது இந்த லிங்கோத்பவ வடிவம் தான். எனவே தான் லிங்க வழிபாடு இங்கிருந்து தான் உருவாகியிருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. இங்கிருக்கும் லிங்கோத்பவருக்கு சூரியன் மறைந்ததும் விளக்கு வைத்து வழிபடுவதால் மனிதனுக்கு உள்ள அகம்பாவம் ஒழிந்து நற்குணம் குடி கொள்ளும். லிங்கோத்பவருக்கு இங்கு இரண்டாம் ஜாம பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து வெண்ணீரால் கலைந்து கம்பளி தரித்து சிவனுக்கு தாழம்பூ சாத்துவார்கள். இந்த காலத்தில் நோயில்லாத மனிதரே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த பூஜையில் சிவனை தரிசனம் செய்து கிரிவலம் வந்து வழிபட்டால் நோய், நொடியின்றி நீண்ட ஆயுள் உண்டாகுமாம். மகா சிவராத்திரியின் பலன் இரட்டிப்பாகும். மற்ற பூஜைகளில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இந்த பூஜையை தவறவிட்டு விடாதீர்கள்.
இதையும் படிக்கலாமே உங்கள் தொழிலில் இருக்கும் நஷ்டம், லாபமாக மாறுவதை கண்கூடாக காண வேண்டுமா? இந்த 3 பொருள் போதும். இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.