நரகத்தை கூட சொர்க்கமாக மாற்ற எம்பெருமானை நினைத்து நெற்றியில் திருநீறு இப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்.

சிவபெருமானை நினைத்து பூஜிப்பவர்களும், சிவனின் பக்தர்களாக இருப்பவர்களும், நிச்சயம் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நெற்றியின் மேல் திருநீறு பூசிக் கொண்டால், நம் தலையில் எழுதப்பட்டிருக்கும் தாறுமாறான தலையெழுத்து கூட சரியாகிவிடும் என்று சிவன் பக்தர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். பிரம்மனால் எழுதப்பட்ட தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தியானது இந்த திருநீறுக்கு உள்ளது என்று நமக்கு தெரிந்தால், சிவராத்திரி அன்று மட்டுமல்ல தினம்தோறும் திருநீற்றை நாம் நெற்றி நிறைய பூசி கொள்வோமா? மாட்டோமா? இது ஒரு பக்கம் இருக்க, இங்கு ஒருவர் திருநீரை முறையாக தினந்தோறும் பூசிக்கொண்டு எம்பெருமானை வழிபட்டதால் ஒரு நரகத்தையே, சொர்க்கமாக மாற்றி உள்ள வரலாற்று கதையை பற்றி தெரிந்தால், நிச்சயம் திருநீற்றின் மகிமையை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கான அந்த வரலாற்று கதை இதோ.