மஹா சிவராத்திரி அன்று இரட்டிப்பு பலன் அடைய இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் போதும்.

மஹா சிவராத்திரி அன்று இரட்டிப்பு பலன் அடைய இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் போதும்.


பஞ்ச பூதங்களில் ஒவ்வொரு தலத்தில் ஒவ்வொரு வடிவில் சிவன் அருள் புரிகின்றார் என்பது தெரிந்ததே. அதில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலாக ஜோதி ரூபமாக தோன்றி பின்னர் ஈசன் லிங்கோத்பவராக அருள் புரிந்தார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ காளஹஸ்தி வாயு தலமாக உள்ளது போல் திருவண்ணாமலை அக்னி தலமாக புகழ் பெற்றது. எனவே மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கபட்டது இந்த தலத்தில் இருந்து தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. கார்த்திகை தீபம் அன்று பக்தர்களால் லட்ச தீபம் ஏற்றப்படுவது போல் மஹா சிவராத்திரி அன்றும் லட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். லட்ச தீபம் காண கண் கோடி வேண்டும் அல்லவா? சிவராத்திரி பலன் இரு மடங்காக கிட்ட கிரிவலம் வருவது பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள்.